பெரும் பாட்டிக்காரிகளின் மார்க்க சட்டங்கள்

quran c

Shafi Madhab Fiqh

மாதவிடாய் ஏற்படக்கூடிய ஆகக்குறைந்த வயது 9 ஆகும். மாதவிடாயின் குறைந்த காலம் ஒரு நாளாகும். கூடிய காலம் 15 நாட்களாகும், அனேகமாக ஏட்படுவது 7, 6 நாட்களாகும்.Untitled-1

“நிபாஸ்” என்றால் பிள்ளை பெற்ற பின் வெளியாகக்கூடிய இரத்தமாகும். இதன் குறைந்த காலம் ஒரு நொடிப்பொழுதாகும். கூடிய காலம் 60 நாட்களாகும். அனேகமாக 40 நாட்களாகும்.

“முஸ்தஹாழஹ்” எனும் (பெரும் பாட்டிக்காரி) என்பவள் மாதவிடாயின் அதி கூடிய காலமாகிய 60 நாட்களை விட அதிகமாக இரத்தம் வரக்கூடிய ஒரு பெண்ணாவாள்.

பெரும் பாட்டிக்காரிகள் (முப்ததிஅஹ் – المبتدأة) ஆரம்பமாக வரக்கூடியவள், (முஃதாதா – المعتادة) வழமையாக வரக்கூடியவள், (முதஹையிரா المتحيرة) நிலைதடுமாற்றம் உடையவள், என மூன்று வகைப்படுவர். இன்னும் ஆரம்பமாக வரக்கூடியவளும், வழமையாக வரக்கூடியவளும் (مميزة) பிரித்தறியக்கூடியவள், (غير مميزة) பிரித்தறிய முடியாதவள், என இரு வகைப்படுவர்.

பெரும்பாட்டுக்காரி “முஃதாதா” (வழமையுள்ளவளாக) அல்லது (ஆரம்பமாக வரக்கூடியவளாக) “முப்ததிஅஹ்”வாக இருக்கும் போது இரத்தம் மூலமாக பிரித்தறிய முடியுமாயின் அவ்வாறு பிரித்தறிய வேண்டும்.

பிரித்தறியும் முறை

மூன்று விதங்களில் அதை அறியலாம்:

1.நிறம்,

2.மணம்

3.தன்மை.

அவற்றுள் “நிறம்”

1.கறுப்பு,

2.சிவப்பு,

3.சாம்பல்,

4.மஞ்சள் (கலங்கள் நிறம்) என நான்கு விதங்களில் அறியப்படும்.

இன்னும் “மணம்”

1.துர்வாடையுடையது,

2.துர்வாடையற்றது என அறியப்படும்.

இன்னும் “தன்மை”

1.கடினமானது,

2.கடினமற்றது என அறியப்படும்.

குறிப்பு: இதில் குறிப்பிடப்பட்ட வரிசையின் பிரகாரம் ஒன்று மற்றதை விட கடினமாகும், உ+ம் கறுப்பு சிவப்பைவிட கடினமாகும். இதன் சிலவற்றிற்கு ஒரு தன்மையும் இன்னும் சிலவற்றிற்கு இரு தன்மைகளும் இருந்தால் இரு தன்மைகள் உள்ளதே கடினமானவையாக கருதப்படும்.

table

குறிப்பு: எதற்கு இரு தன்மைகளோ அல்லது அதற்கு மேலாகவோ உள்ளதோ அது கடினமானதாகும், (மாதவிடாயாகும்) எதன் தன்மைகள் மற்றதுடன் இணைத்துப்பார்கும்போது குறைவாக உள்ளதோ அது “இஸ்திஹாழஹ்” (பெரும்பாட்டி)யாகும். சிவப்புடன் துர்வாடையுள்ளது, கறுப்பு மட்டும் வருவது என்று பார்க்கும்போது சிவப்பு மாதவிடாயாகும்.

பிரித்தறிவதன் நிபந்தனைகள்

1. கடினமானது ஒரு நாளை விட குறையாமல் இருக்கவேண்டும்.

2. 15 நாட்களையும் விட அது அதிகமாகாமல் இருக்கவேண்டும்.

3. 15 நாட்களை விட பலவீனமான இரத்தம் குறையாமல் இருக்கவேண்டும்.

 •   “முப்ததிஅஹ்” என்றால் இரத்தம் இதற்கு முன்னால் வராமல் ஆரம்பமாக வரக்கூடியவள், இவளிடத்தில் பிரித்தறியும் ஆற்றல் இல்லையானால் ஒரு நாள் மாதவிடாயாகும், மற்ற நாட்கள் பெரும்பாட்டிக்காரியாகும்.
 •  “முஃதாதாஹ்” என்றால் இதற்குமுன் ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது மாதவிடாயும் சுத்தமும் வந்திருப்பவள். இவளுக்கு பிரித்தறிய முடியாதெனில் வழமையைக் கவனிக்க வேண்டும் இல்லையேல் பிரித்தறிய வேண்டும்.
 •  இரத்தத்தை பல வகைகளாக (நிறம், தன்மை, மணம், கடினம், பலவீனம் என) பிரித்தறிய முடியுமாயின் பிரித்தறிய வேண்டும், அவள் முஃதாதாவாக அல்லது “முப்ததிஅஹ்” வாக இருந்தாலும் சரியே.
 • “முதஹய்யிறாஹ்” என்றால் வரக்கூடிய கால அளவை மறந்தும், இரத்தத்தைப் பிரித்தறிய முடியாமலும் இருப்பவள்.

   யாராவது எண்ணிக்கையை (அளவை) மாத்திரம் மறந்து காலம் ஞாபகம் இருந்தால், அல்லது காலத்தை மாத்திரம் மறந்து அளவு ஞாபகம் இருந்தால் அவள் இதற்குள் (“முதஹய்யிறா”விற்குள்) உட்படமாட்டாள்.

   ஒரு பெண்ணுக்கு பிரித்தறிய முடியுமானால் அவள் (முதல்தரம்) “முப்ததிஅஹ்”வாக இருந்தாலும், அல்லது (வழமையாக வரக்கூடிய) “முஃதாதாஹ்”வாக இருந்தாலும், பிரித்தறிவதன் மூலம் கடினமானதை மாதவிடாயாகவும் பலகீனமானதை பெரும்பாட்டியாகவும் கணிக்கவேண்டும்.

   முதல் மாதத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு நாளோ அல்லது அதற்கு மேலாகவோ கறுப்பு இரத்தம் வந்து, பின்பு அதைத் தொடர்ந்து சிவப்பு இரத்தம் 15 நாட்கள் ஆவதற்கு முன் வந்தால், கறுப்பு இரத்தம் வரும்போது எதுவெல்லாம் செய்யாமல் தவிர்ந்து இருந்தாளோ அப்போதும் தவிர்ந்து இருப்பாள். ஏனெனில் 15 நாட்களுக்கு முன் நின்று விட்டாள் அது அனைத்தும் மாதவிடாயாகும், 15 நாட்களை தாண்டினால் பிரித்தறியும் ஆற்றலுள்ள பெரும்பாட்டிக்காரியாகும், அவ்வேளையில் கறுப்பை மாதவிடாயாகவும் சிவப்பை சுத்தமாகவும் கணிக்கப்படும் முதலாவது மாதமானபடியால் 15 நாட்கள் பூர்தியானதும் குளிக்க வேண்டும், சிவப்பு நிற இரத்தம் வரும் காலத் தொழுகைகளை கழா செய்ய வேண்டும், மேலும் நோன்பு தொழுகைகளை தொடர்ந்து செய்யவேண்டும்.ஆனாலும் இரண்டாம் மூன்றாம் மாதங்களில் அதற்குப்பிறகு எப்பொழுது இரத்தத்தில் மாற்றம் ஏற்படுமோ அப்போதே குளிக்க வேண்டும், மேலும் (சுத்தத்தின் காலத்தைப் போல்) நோன்பு நோற்க வேண்டும் தொழ வேண்டும்.

“முமைய்யிஸஹ்காரியின் கடினமான பலவீனமான இரத்தத்தின் நிலமைகள் மூன்று.

1.பலமானது கடினமானது. ஆரம்பத்தில் வருவது (உ+ம்: 5 நாட்கள் கறுப்பு இரத்தமும் பின்னர் தொடர்ந்து சிவப்பு இரத்தமும் வருதல்) இதில் கறுப்பு இரத்தம் மாதவிடாயாகும்.

2.ஆரம்பத்தில் பலவீனமாக வருதல்.இது நான்கு பங்குகளாகப் பிரியும் அவைகள் வருமாறு.

 • இரு பலவீனமானதற்கு மத்தியில் கடினமான (பலமான) இரத்தம் வருவது, உ+ம்: 5 நாட்கள் சிவப்பு இரத்தம் வந்து, பின்பு 5 நாட்கள் சிவப்பு இரத்தம் வருவது இவ்வேளையில் கறுப்பு இரத்தம் மாத்திரமே மாதவிடாயாகும் மற்றது “இஸ்திஹாழஹ்”வாகும்.
 • 15 நாட்கள் சிவப்பாகவும் இன்னும் 15 நாட்கள் கறுப்பாகவும் வந்து நின்று விடுவது.இதில் கறுப்பு மாதவிடாயாகும் சிவப்பு “இஸ்திஹாழஹ்”வாகும்.
 • 15 நாட்கள் சிவப்பாகவும் இன்னும் 15 நாட்கள் கறுப்பாகவும் வந்து 15 நாளுடன் முடியாமல் தொடர்ந்து வருவது.இந்த நேரத்தில் பிரித்தறிய முடியாது. மாறாக ஒரு சொல்லின் பிரகாரம்: ஒருநாள் மாதவிடாயாகும்.இன்னுமொரு சொல்லின் பிரகாரம்: ஆறு அல்லது 7 நாட்கள் மாதவிடாயாகும்.
 • 5 நாட்கள் சிவப்பு இரத்தம் வந்து 15 நாட்களுக்கு அதிகமாக கறுப்பு இரத்தம் வருவது. ஒரு சொல்லின் பிரகாரம் மாதவிடாய் ஒரு நாளாகும், மற்றொரு சொல்லின் பிரகாரம் 6 அல்லது 7 நாட்களாகும்.
 •  இரு பலமான இரத்தங்களுக்கு மத்தியில் ஒரு பலவீனமான இரத்தம் வருவது. உ+ம்: இரு கறுப்பு இரத்தங்களுக்கு இடையில் சிவப்பு அல்லது மஞ்சள் இரத்தம் வருதல், இதில் பலபங்குகள் உள்ளன ஆனால் அனைத்தும் “முமய்யிஸாஹ்” வுக்கு உரியதல்ல, மாறாக சில “முமய்யிஸாஹ்”வுக்கு உரியது, இன்னும் சிலதோ பொதுவானது.

அவைகள் வருமாறு.

 • இந்த மூன்று இரத்தங்களிலிருந்தும் ஒவ்வொன்றும் ஒருநாள் அல்லது அதற்கு மேலால் வருதல். உ+ம்: 5 நாட்கள் கறுப்பு இரத்தமும், 5 நாட்கள் சிவப்பு இரத்தமும், 5 நாட்கள் கறுப்பு இரத்தமும் வருவது. இது அனைத்தும் மாதவிடாயாகும். ஆனால் மொத்தமாக 15 நாட்களைவிட தாண்டாமல் இருக்க வேண்டும்.
 • மொத்தமாக 15 நாட்களைவிட அதிகமாக வருதல், உ+ம்: 7 நாட்கள் கறுப்பு இரத்தமும், பின்பு 7 நாட்கள் சிவப்பு இரத்தமும், பின்பு 7 நாட்கள் கறுப்பு இரத்தமும் வருதல்.இந்த வேளையில் முதல் கறுப்பு இரத்தம் 7 நாட்களும் மாதவிடாயாகும், மற்றது “இஸ்திஹாழஹ்”வாகும்.
 • ஒவ்வொரு நிற இரத்தமும் ஒரு நாளை விட குறைவாக வருதல். உ+ம்: 1 மணி நேரம் கறுப்பு இரத்தமும், பின்பு 1 மணி நேரம் சிவப்பு இரத்தமும், பின்பு 1 மணி நேரம் கறுப்பு இரத்தமும் வந்து துண்டிப்பது (தமு பஸாத் – (دم فساد கெட்ட இரத்தமாகும்.
 • ஒவ்வொரு இரத்தமும் ஒரு நாளை விட குறைய வருவது. ஆனால் அதன் மொத்தம் ஒரு நாளாக இருந்தால், அப்போது அனைத்தும் மாதவிடாயாகும். உ+ம்: ஒரு நாளில் 3ல் ஒன்று கறுப்பு இரத்தமாகவும், மற்றது சிவப்பு இரத்தமாகவும், மற்றது கறுப்பு இரத்தமாகவும் வருவது.
 • இரு கறுப்பு இரத்தங்களும் ஒரு நாளில் வருவது இடையில் வரும் சிவப்பு இரத்தம் குறைந்து வருவது.அவர்களிடத்தில் அனைத்தும் மாதவிடாயாகும்.
 • இரு கறுப்பு இரத்தங்களும் ஒரு நாளைவிடக் குறைவாகவும் இடையில் வரும் சிவப்பு இரத்தம் ஒரு நாளைவிட மேலாகவும் வருவது. உ+ம்: அரை நாள் கறுப்பு இரத்தம் வந்து, பின்னர் சிவப்பு இரத்தம் 5 நாட்கள் வருவது, பின்னர் கறுப்பு இரத்தம் அரை நாள் வருவது. இவை அனைத்தும் மாதவிடாயாகும்.
 • முதலாவது  கறுப்பு இரத்தமும், இடையில் வரும் சிவப்பு இரத்தமும் ஒரு நாளை விட அதிகமாக வருவது. இறுதியில் வரும் கறுப்பு இரத்தம் ஒரு நாளை விட குறைவாக வருவது. உ+ம்: 5 நாட்கள் கறுப்பு இரத்தம் வந்து பின்னர் 5 நாட்கள் சிவப்பு இரத்தம் வருவது. பின்னர் கறுப்பு இரத்தம் அரை நாள் வருவது. இவை அனைத்தும் மாதவிடாயாகும்.
 • ஆரம்ப இரண்டும் ஒரு நாளை விட குறைவாக வருவது. அரை நாள் கறுப்பு இரத்தமாகவும், அரை நாள் சிவப்பு இரத்தமாகவும், பின்பு 5 நாட்கள் கறுப்பு இரத்தமாகவும் வருவது. இவை அனைத்தும் மாதவிடாயாகும்.

“முதஹய்யிறாஹ்”காரி அதாவது தன் வழமையான காலத்தையும் நேரத்தையும் மறந்தவள் இன்னும் பிரித்தறிய முடியாமல் போகின்றவள்.

  “முதஹய்யிறாஹ்” காரியுடன் உடலுறவு கொள்வது கணவனுக்கோ அல்லது எஜமானுக்கோ ஹராமாகும். தொளுகையல்லாத வேறு நேரங்களில் குர்ஆண் ஓதுவது, அதை சுமப்பது தொடுவது அனைத்தும் ஹராமாகும். (தொழுகையில் ஓதுவது ஆகும்) சுன்னத்தான தொழுகை, நோன்பு, தவாப் முதலியவைகள் அனைத்தும் ஹராமாகும். “முதஹய்யிறாஹ்”வுக்கு “தலாக்” வழங்கப்பட்டால் அவளுடைய இத்தா 3 மாதங்களாகும்.

ரமழான் மாத நோன்பு பிடிக்கும் முறை

  ரமழான் மாதமும் அதற்கு அடுத்த மாதமும் நோன்பு நோற்றால் இம் மாதங்கள் பூர்த்தியாக 30 நாட்களாக இருந்தால் ஒரு மாதத்தின் அதிகூடிய மாதவிடாய்காலத்தை அதாவது 15 நாட்கள் முதல் நாள் இடையில் மாதவிடாய் வந்து 16ஆவது நாள் அரைவாசியில் முடியவும் கூடும் பேணுதலுக்காக 16 நாட்கள் கழித்து ஒவ்வொரு மாதத்திலும் 14 நாட்கள் கணக்கிடவும், அல்லது குறைமாதமாக 29 நாட்களால் முடியுமாக இருந்தால் 13ஆக கணக்கிடவும்.

  முதலாவதின் பிரகாரம் 28 நாட்களாகும், மீதி இரு நாட்களை பூர்த்தி செய்ய 18 நாட்கள் நோன்பு  நோற்க வேண்டும் 16 நாட்களை மாதவிடாயாகக் கருதி நோன்பு நோற்க வேண்டும், ஏனெனில் முழுமாதமும் சுத்தமான காலம் என்ற சந்தேகமுள்ளது என்பதனாலாகும்.

    “முதஹய்யிறாஹ்”காரி தனக்கு மாதவிடாய் முடிவடையும் நேரத்தைமட்டும் அறிந்தவளாக இருந்தால். உ+ம்: மஃரிப் (சூரியன் அஸ்தமிக்கும்) நேரத்தில் முடிவடையுமாயின் சூரியன் அஸ்தமித்தபின் ஒவ்வொரு நாளும் குளிப்பது கட்டாயக் கடமையாகும், வேறுநேரத்தில் குளிக்கத் தேவையில்லை. அவளுக்கு முடிவடையும் நேரம் தெரியவில்லையானால் ஒவ்வொரு பர்ழான தொழுகைக்கும் குளிப்பது கடமையாகும், குளித்ததன் பிறகு தொழுகையை பிற்படுத்தினால் வுளூ செய்வது கட்டாயமாகும்.

 Compile by:

Ash-Sheikh A.N.M.Muhammad Farik (Baari)

1,345 total views, 1 views today

Comments

comments